Monday, December 17, 2012

அன்பின் உயர்நிலை.

ஒவ்வொரு நாளும் வென்று கொண்டே இருந்தால்
உன்னை உயர்வாய் நிலை நிறுத்திக்கொள்ளலாம்...
ஒவ்வொரு நாளும் நேசித்துக்கொண்டே இருந்தால்
உன் அன்பை உயர்வாய் நிலை நிறுத்திக்கொள்ளலாம்...

நேசிப்பு.

நேசிக்க மட்டுமே நேசிப்பு...
பிரதி பலன் பார்ப்பது வியாபாரம்...
என் மனதுக்கு பிரியமானவர்களை
அதிகமாக நேசிப்பதால்...
எனக்கு சிரமங்கள் நேர்ந்தால்
அதுவும் எனக்கு சம்மதமே...
நேசிப்பது என் கடமை...
பலாபலன் பார்த்து நேசிப்புக்கு
அளவுகோல் வைப்பது
மனிதத்திற்கு அழகா..?

Monday, July 30, 2012

உன் தலைமுடியால் என் தலை எழுத்தை மாற்றியவளே.!

உன்னை பார்த்த இந்த நாலு நாளாய் 
நான் நானாய் இல்லை...

உன் கடைக்கண் பார்வையும், செவ்வாய் இதழும்,
குறும்பு சிரிப்பும்,சீரான உன் முகமும் 
என்னை கொல்லாமல் கொல்கிறதடி.!

உன் தலைமுடியால் நீ என்னை வருடி
சென்றபோது என் தலை எழுத்தையும்
சேர்த்தல்லவா மாற்றி சென்றாய்.!

என் பருவத்தில் கூட நான் படாத பாட்டை
இப்போது பட வைத்தவளே...

என் தூக்கம் இதுவரை எந்த பெண்ணாலும்
தொலைக்கப்பட்டதில்லை
இப்போது தொலைத்தேன் உன்னால்...

புவி ஈர்ப்பு விசையை விட
உன் விழி ஈர்ப்பு விசை பெரிதாய் ஈர்க்கிறதடி என்னை...

பெண்ணே என் எண்ணத்திலிருந்து விலகிப்போ
அல்லது நீயே என் வாழ்வாய் வா...