Wednesday, November 3, 2010

இயற்கையின் போதை.

பாதி நிலவும் முழு அலையும்
என்னை  சிதறடிக்கச் செய்கிறது
ஈர மணலும் இருள் காற்றும்
என்னை சிலிர்க்க வைக்கிறது
அருகில் இருக்கும் குடிகாரன் உளறல் கூட
எனக்கு கவிதையாய் கேட்கிறது
அரைக்கால் சட்டை அணிந்த
இளம் யுவதியின் அழகை விட
நுரை ஆடை அணிந்த
அலையின் அழகு என்னை ஈர்க்கின்றது
முன்னே ஜன்னலுக்கு வெளியே
சுதந்திரமாய் நிலா
ஜன்னலுக்குள்ளே வீட்டு
சிறைக் கைதியாய் நான்
இப்பொழுது கடற்கரை மணலில்
நிலவை போல் சுதந்திரமாய் நான்
வீட்டிற்க்குள் இன்னும்
சிறையாய் என் துணை
போதையில் நான்...
இயற்கையின் போதையில் நான்...
இதை விடவா மதுவும் மாதுவும் என்னை ஈர்த்துவிடும்.?
என் போதையை ஏற்றிவிடும்.?
துவள்கிறது என் கை போதையில்
துள்ளுகிறது என் மனம் இயற்கையில்
இதுவா இயற்கை.?
இத்துணை வருடங்கள் மறந்தேனே உன்னை
போதை என்னை உன்னுடன் இணைத்தது
போதை என்னை உன்னுடன் இணைத்தது
இனி நீ தரும் போதை போதும்
இந்த இயற்கையின் போதை போதும்
உன்னுள் நான் மூழ்க
என்னை நீ நிரப்ப
இத்துணை போதையை இதற்கு முன்
நான் உணர்ந்தது இல்லை.!
இனி எப்பொழுதும் இதே போதையில்
நீயும் நானும் இருப்போம்
இயற்கையின் போதை எனக்கு இருக்கையில்
எனக்கு ஏன் இனி வேறு போதை.?
இறைவா இந்த போதை எனக்கு நிரந்தரமாய் இருக்கட்டும்...
இயற்கையின் போதை எனக்கு நிரந்தரமாய் இருக்கட்டும்...

1 comment:

  1. எப்படிப்பா இதெல்லாம், என்றிலிருந்து இப்படியெல்லாம், இந்த சரக்கு எல்லாம் எங்கிருந்தது இவ்வளவு நாள்? தூசி படிந்து கிடந்ததை எல்லாம் இப்ப தான் தூக்கத்திலிருந்து எழுப்புகிறாயோ?

    ReplyDelete